பாதுகாப்பு ஆணை:  10ல் நான்கு மனுக்கள் ஏற்பு

துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தின்கீழ் பாதுகாப்பு கோரி செய்யப்படும் மனுக்களில் 10ல் நான்கு மனுக்கள் ஏற்கப்பட்டு பாதுகாப்பு ஆணை பிறப்பிக்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இதை நேற்று நாடாளு மன்றத்தில் தெரிவித்த சட்ட, சுகாதார மூத்த துணையமைச்சர் எட்வின் டோங் (படம்), கடந்த 2018ஆம் ஆண்டு பாது காப்பு ஆணை கோரி 535 மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு அமலுக்கு வந்த துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம் இணையத்  துன்புறுத்தல், பாலியல் தொல்லை போன்றவற்றிலிருந்து பாதிக்கப் பட்டோருக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்டது.
எதிர்வரும் மாதங்களில் நீதிமன்றம் வழங்கும் பாதுகாப்பு ஆணைகளை மீறுவோர் மீது விரைவான, கடுமையான தண்டனைகள் விதிக்க வழி செய்யும் வகையில் திருத்தங்கள் செய்யப்படும் என்று அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று நேற்று வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ கூறினார். படம்: 'கெல்லோக்ஸ்'

21 Jul 2019

ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓராண்டு திட்டம்

தொண்டூழியர்கள், அதிபர் சவால் நன்கொடைத் திட்டம் மூலம் பயனடைந்து வருபவர்கள் ஆகியோருடன் திருவாட்டி ஹலிமா சந்தித்துப் பேசியதுடன் தெரு காற்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து, நடனம் போன்ற பல அங்கங்களில் பங்கேற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Jul 2019

அதிபர் ஹலிமா யாக்கோப்: சமூகத்திற்கு ஆதரவு அளிக்க இளையர்கள் முன்வர வேண்டும்