பாட அடிப்படையில் தரம்  பிரிக்க அமைச்சிடம் கோரிக்கை

மாணவர்களை வழக்கநிலை, விரைவு என தரம் பிரிப்பதை விடுத்து, பாடங்களின் அடிப்படை யில் தரம் பிரிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர். கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் நேற்று மாலையில் தொடங்கியபோது, இதுகுறித்து அவர்கள் பேசினர்.
இதுநாள் வரையில் தரம் பிரிப்பு என்பது சிங்கப்பூர் கல்வித் துறையில் மாற்றமுடியாத ஓர் அம்சமாக இருந்துவந்துள்ளது என்று கூறிய ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா, இது மாணவர்களிடம் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

கல்விக்கான நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை வகிக்கும் திருவாட்டி டெனிஸ் புவா, பாட அடிப்படையிலான தரம் பிரிப்பு இதற்கு நல்ல தீர்வாக அமையும் என்றார். அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் கடந்த ஆண்டு அறிமுகமான மாணவர்கள் பாடங் களை வெவ்வேறு நிலைகளில் படிக்க உதவும் முறை ஆக்ககர மான விளைவுகளைத் தந்துள்ள தாக அவர் கூறினார். 
சிங்கப்பூர் கல்வித் திட்டத்தில் 1980ஆம் ஆண்டு நல்ல நோக்கத் துடன் மாணவர் தரம் பிரிப்பு முறை அறிமுகம் கண்டது. ஒவ்வொரு மாணவரும் தங்கள் திறனுக்கு ஏற்ற நிலையில் கல்வி கற்க இந்த முறை உதவியது என்றார் ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு அங் வெய் நெங்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது