குற்றத்தடுப்பில் உதவிய பத்து பேருக்கு போலிஸ் பாராட்டு

தங்கள் வேலையிடத்தில் ஓர் அகழ்பொறிக்குத் தீ வைத்தவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க இரண்டு மாதங்களுக்கு இரவில் கண்காணிப்புப் பணியில் ஈடு பட்டு, ஒருவழியாக குற்றவாளியைப் பிடித்த வெளிநாட்டு ஊழியர்கள் சிலருக்கு நேற்று போலிசின் பாராட்டுக் கேடயம் வழங்கப்பட்டது. 
‘மீடியா லிங்க்’ எனுமிடத்தில் நடந்த இந்தக் கண்காணிப்பு முயற்சியின்போது, கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி தங்கள் வேலையிடத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஆடவரை ஆறு ஊழியர் கள் துரத்திப் பிடித்தனர்.
அந்த ஆறு ஊழியர்களுடன் அந்நிறுவனத்தின் பாதுகாப்பு அதி காரியான சிங்கப்பூரர் இயோ கோக் கியனும் பாராட்டு பெற்றார்.
“இந்த விருது கிடைத்தது குறித்து நாங்கள் மிகவும் பெரு மைப்படுகிறோம். இப்போது நாங் கள் நிம்மதியாகத் தூங்கலாம்,” என்றார் பங்ளாதேஷைச் சேர்ந்த 27 வயது ஹோசேன் முகம்மது.
இவர்களைத் தவிர மற்ற மூவ ரும் மூன்று வெவ்வேறு சம்பவங்க ளில் குற்றத்தடுப்பில் உதவியதற் காக பாராட்டு பெற்றனர். 
அவர்களில் ஒருவரான எகிப் தைச் சேர்ந்த அபுபக்கர் எல்ஹக் கிம், ஜனவரி 27ஆம் தேதியன்று டோ டக் ரோட்டில் ஆடவர் ஒருவர் மற்றோர் ஆடவரிடமிருந்து கை பேசியைப் பறிக்க முயலும் செயலில் அவரைத் தாக்குவதைப் பார்த்தார்.
உடனே அங்கு சென்று தாக்கு தலைத் தடுக்க முயன்றபோது திருடனால் தாக்கப்பட்டார். பின் னர் தன்னைத் தற்காத்துக்கொள்ள அவர் திருடனை வீழ்த்தினார்.
பின்னர் திருடன் போலிசில் ஒப்படைக்கப்பட்டான்.
ஏன் தாக்குதலைத் தடுக்க முயன்றார் என்று கேட்கப்பட்டதற்கு, “ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது காணொளி எடுப்பதை விடுத்து அவருக்கு உதவ முற்பட வேண்டும். அதுதான் உண்மை யான மனிதாபிமான செயல்,” என் றார் திரு அபுபக்கர்.  

பாராட்டுக் கேடயம் பெற்ற பத்து பேரில் எழுவர் (இடமிருந்து), பங்ளாதேஷைச் சேர்ந்த திருவாளர்கள் ஹோசேன் முகம்மது ஃபொர்ஹாத், இஸ்லாம் ஸஹிருல், ஹோசேன் முகம்மது, இயோ கோக் கியன், இந்தியாவைச் சேர்ந்த சு‌ஷில் குமார், ஹர்பிரித் சிங், கலியப்பெருமாள் ஆசைத்தம்பி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணொளி எடுக்கப்பட்ட மாணவி மோனிக்கா பே. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

22 Apr 2019

கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரும் மனு

சான் ஃபிரான்சிஸ்கோ தொழில்நுட்பக் கருத் தரங்கில் பங்கேற்ற (இடமிருந்து) ‘ஸ்ட்ரிப்’ நிறுவனத் தலைமை நிர்வாகி திரு பேட்ரிக் கொலிசன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு சிங் கை ஃபோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

22 Apr 2019

‘பொருளியல் சுழற்சியை சிங்கப்பூர் சமாளிக்கவேண்டும்’