கொண்டோமினிய நீச்சல் குளத்தில் கார்

கேலாங்கில் உள்ள கொண்டோமினியத்தின் சிறுவர் நீச்சல் குளத் துக்குள் நேற்று முன்தினம் காலை யில் ஒரு கார் புகுந்தது.
கேலாங் லோரோங் 27Aஇல் உள்ள சிம்ஸ் கிரீன் கொண்டோ மினியத்தில் காலை 6.45 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்தது என்று வான் பாவ் சீன நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டது.
அது ஒரு தனியார் வாடகை கார் என்றும் பயணி ஒருவரை ஏற் றிச் செல்ல அது கொண்டோமினிய வளாகத்துக்குள் வந்திருக்கிறது என்றும் அந்த நாளிதழ் கூறியது.
அந்த காரின் ஓட்டுநர் ஒரு முதியவர். அவருக்குக் காயம் ஏற் படவில்லை. எனினும் அவர் அதிர்ச்சியுடன் காணப்பட்டார் என்றும் பெயர் குறிப்பிட விரும் பாத, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சொன் னார்.
அந்த ஓட்டுநர் கொண்டோமினி யத்தின் பாதுகாவ லர்களிடம் உதவி கேட்டார் என் றும் சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்துக்குப் பிறகு கார் அந்த இடத்திலிருந்து இழுத்துச் செல்லப் பட்டது என்றும் அவர் கூறினார்.
இச்சம்பவத்துக்குப் பிறகு அந்த நீச்சல் குளம் மூடப்பட்டது என்றும் வான் பாவ் நாளிதழிடம் பேசிய கொண்டோமினியத்தின் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.