வசதி குறைந்தவர்களுக்குக் கூடுதல் நிதி உதவி

வசதி குறைந்த சிங்கப்பூரர்களுக்குக் கொடுக்கப்படும் மாதாந்தர நிதி உதவியை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

‘காம்கேர்’ நீண்ட கால உதவித்திட்டத்தில் இருக்கும் தனிநபர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் 500 வெள்ளி தொகை ஜூலை 1ஆம் தேதி முதல் 600 வெள்ளியாக உயரும். இருவர் கொண்ட குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த 870 வெள்ளி தொகை இனி 1,000 வெள்ளியாக உயரும்.

பொது உதவித் திட்டம் என்று அழைக்கப்படும் இதன் கீழ் மூப்பு அல்லது நோயின் காரணமாக நிராதரவாக இருப்போருக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த மாற்றத்தால் கிட்டத்தட்ட 4,000 வீடுகள் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.