பராமரிப்புத் திட்டங்கள் வழங்கும் கூடுதல் உயர்நிலைப் பள்ளிகள் 

பள்ளிநேரத்திற்குப் பிந்திய பராமரிப்புத் திட்டங்கள் வழங்கும் உயர்நிலைப் பள்ளி களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண் டுக்குள் 120ஆக அதிகரிக்கும் என்று நேற்று கல்விக்கான இரண்டாம் அமைச் சர் இந்திராணி ராஜா (படம்) தெரிவித் தார். ‘கியர்-அப்’ எனப்படும் இப்பரா மரிப்புத் திட்டத்தின் கீழ் பள்ளிகள் சமூகப் பங்காளிகளுடன் இணைந்து தனிப்பட்ட ஆதரவும் பள்ளி நேரத்திற்குப் பின் ஈடுபட 
நடவடிக்கைகளும் வழங்கும். 
இதனால் சமுதாயத்திற்குத் தேவையான திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும். பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் திறமைக்குக் கீழ் செயல்படுவதன் காரணங்களைக் கண்டறிந்து அதற்கு ஏற்பத் தீர்வுகளைத் திட்டமிட ‘அப்லிஃப்ட்’ எனும் குழு அமைச்சர் இந்திராணியின் தலைமையில் இயங்கும். கல்வி அமைச்சின் கீழ் அமையவிருக்கும் இதன் அலுவலகம், பள்ளிகளுக்கும் சமூகப் பங்காளிகளுக்கும் இடையே உள்ள உறவுகளை வலுப்படுத்தத் திட்டமிடும்.