சொந்த வீடு வாங்கத் தகுதியுடைய குடும்பங்களைக் கண்டறிய வீவக குழு      

 வாடகை வீடுகளில் இருக்கும் குடும்பங்கள் தங்கள் சொந்த வீடுகளை வாங்கக் கூடுதல் ஆதரவு வழங்கப்பட உள்ளது.  
இதன் தொடர்பில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. தேசிய வளர்ச்சி அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங் இது குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இவ்வாண்டின் பிற்பகுதியில் அமைக்கப்படவிருக்கும் இந்த வீட்டு உரிமை ஆதரவுக் குழு, வருமானச் சமத்துவமின்மையை மட்டுப் படுத்தவும் குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவி அளிக்கவும் நடப்புக்கு வரவுள்ள பல்வேறு திட்டங்களில் ஒன்றாகும். தற்போது வாடகை வீடுகளில் இருக்கும் குடும் பங்கள் தங்கள் வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் போது சூழ்நிலைக்கு ஏற்ப அவை மதிப்பீடு செய்யப்படுகின்றது. 

இனி அமையவிருக்கும் இப்புதிய ஆதரவுக் குழு, வீடு வாங்கும் முறையை அறிந்திடவும் தேவைக்கேற்பத் திட்ட மிட்டு வீடு வாங்கவும் வீட்டுச் சாவிகளைப் பெற்றுக்கொள் ளும் வரை அந்தக் குடும்பங்களை கவனித்துக்கொண்டு உதவி வழங்கும். இத்திட்டம் வழி, வீட்டு உரிமை பெறத் தயாராக இருக்கும் குடும்பங்களுக்குத் தனிப்பட்ட முறை யில் சேவைகள் வழங்கி உதவ முடியும் என்று திருவாட்டி சுன் கூறினார்.