அமைச்சர் ஓங்: ஆங்கிலம் பேச நான் சிரமப்பட்டேன்

பெரும்பாலான மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் வேறு பாடுகள் உள்ளன என்பதை கல்வி அமைச்சர் ஓங் யி காங் தனது சொந்த அனுபவத்தை உதாரணமாக நாடாளுமன்றத்தில் நேற்று பகிர்ந்துகொண்டார். 
சீன மொழி பேசும் குடும்பத் திலிருந்து வந்த திரு ஓங், தொடக்கத்தில் ஆங்கிலம் பேச சிரமப்பட்டார். 
“கல்வியில் பின்தங்கியிருப்ப வர்களுக்காக தற்போது தொடக் கப் பள்ளி மாணவர்களுக்குள்ள கற்றல் ஆதரவு திட்டம் அப்போது இருந்திருந்தால் நானும் பலன் அடைந்திருப்பேன். 
“உயர்நிலைப் பள்ளியில் இப்போதுள்ள ஆதரவு திட்டம் முன்பு இருந்திருந்தால், நான் ஆங்கில மொழிப் பாடத்தை குறைவான நிலையில் எடுத்து படித்திருப்பேன். அந்த வகையில் நான் மெதுவான வேகத்தில் மொழி ஆற்றலை வளர்த்திருக்க முடியும்,” என்றார் அமைச்சர்.

தாம் தொடக்கநிலை ஒன்றில் சேரும்போது ஆங்கிலத்தில் சரி யாகப் பேச வராது, வாசிக்கவும் இயலாது என்ற திரு ஓங் தொடக்கநிலை 3க்கு சென்ற பிறகுதான் ஆங்கிலச் சொற் களின் ஒலி முறையைக் கற்று, சொந்தமாக வாசிக்கத் தொடங்கி யதாக எடுத்துரைத்தார்.
“சீன மொழி பேசும் குடும்பத் திலிருந்து வந்த நான் சிறு வய தில் சீன கேளிக்கைச் சித்திர நூல்களை மட்டுமே படிப்பேன். காலஞ்சென்ற என் தாயார் ஒரு சீன ஆசிரியர். எனக்கு அவர் சொல்லிக்கொடுக்க முயன்றார். ஆனால் அவரது ஆங்கில மொழியாற்றல் குறைவாகத்தான் இருந்தது. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (வலது) கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார் புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். படம்: இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்

24 Mar 2019

இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி

அட்மிரல்டி பிளேஸ் கடைத் தொகுதியில் உள்ள தற்போதைய சந்தை உட்லண்ட்ஸ் ஈஸ்ட் அக்கம்பக்க போலிஸ் மையத்துக்குப் பக்கத்தில் உள்ள இடத்துக்கு மாறுவது பற்றிய தகவலை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் சுற்றறிக்கையில் தமிழுக்குப் பதிலாக தவறுதலாக இந்தி மொழி அச்சடிக்கப்பட்டு இருந்தது. படம்: விஜயா கந்தசாமி ஃபேஸ்புக்

24 Mar 2019

சுற்றறிக்கையில் தமிழ் என்று எண்ணி தவறுதலாக இந்தி மொழி