நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும் தொடக்கக் கல்லூரிகள்

பல ஆண்டுகளாக இருந்து வரும் தொடக்கக் கல்லூரி வளாகங்கள் அடுத்த சில ஆண்டுகளில் புதுப் பிக்கப்படவுள்ளன என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் நேற்று கூறினார்.
குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையால் அண்மையில் இணைந்த கல்லூரிகளும் இதில் அடங்கும். 
2022ஆம் ஆண்டு முதல் கல்வி அமைச்சு பள்ளியின் வசதி களை மேம்படுத்துவதால் தொடக் கக் கல்லூரிகளின் உள் கட்டமைப் பும் மெருகேற்றப்படும் என்று திரு ஓங் சொன்னார். 
“இணைந்த தொடக்கக் கல் லூரிகளில் சில, மிகப் பழைய அரசு தொடக்கக் கல்லூரிகளாக
வும் உள்ளன. அவற்றில் உள்ள வசதிகளும் பழையதாகிவிட்டன.

“தொழில்நுட்பக் கல்விக் கழ கங்கள், பலதுறைத் தொழிற் கல்லூரிகள் ஆகியவற்றின் கட்டட உள்கட்டமைப்பைப் படிப்படியாக மேம்படுத்தி வருவதற்கு இடையே தொடக்கக் கல்லூரிகளுக்கும் புதிய வசதிகள் தேவைப்படுகின் றன,” என்றார் அமைச்சர் ஓங்.
கட்டடங்கள் இருந்து வரும் கால அளவு, தற்போதுள்ள வசதி களின் நிலை, புதுப்பிப்புப் பணி களின்போது பள்ளிகளுக்கான தற்காலிக இடங்கள் போன்றவற் றைக் கருத்தில் கொண்டு கல்லூரி களின் புதுப்பிப்பு திட்டமிடப்படும் என்றும் அவர் விவரித்தார்.