புதிய ‘சாஸ்’ சலுகைகள் நவம்பர் 1ல் அறிமுகம்

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல் லது இதர நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படும் எல்லா சிங்கப்பூரர் களும் நவம்பர் 1 முதல் சமூக சுகாதார உதவித் திட்டம் (சாஸ்) மூலம் உதவித்தொகை பெறுவர். ஏற்கெனவே இதற்குத் தகுதி பெற் றோருக்கு கூடுதல் உதவிகள் கிடைக்கும்.
தனிநபர் மாத வருமானம் $1,800க்கு மேல் பெறுபவர்களைக் கொண்ட குடும்பம் அல்லது வரு டாந்திர மதிப்பு $21,000க்கு மேல் உள்ள வீட்டின் உரிமையாளர் ஆகி யோருக்காக புதிய சாஸ் பச்சை அட்டை அறிமுகம் செய்யப்படுகிறது.

அதனை வைத்திருப்போர் சாதா ரண வகை நாள்பட்ட நோய்க்கு அவர்கள் ஆண்டுதோறும் $112 பெறுவர். அதேநேரம் சிக்கலான நோய் நிலையைக் கொண்டோருக்கு அந்தத் தொகை $160ஆக இருக் கும். பலதரப்பட்ட நாள்பட்ட நோய் நிலைகளைக் கொண்டோரும் இதில் அடங்குவர்.
இந்தப் புதிய சுகாதார உதவித் திட்டத்தை சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் நேற்று நாடாளுமன்றத்தில் தமது அமைச் சின் வரவுசெலவுத் திட்ட விவாதத் தின்போது அறிவித்தார்.
கடந்த ஆண்டில் சாஸ் உதவி களால் 630,000 நோயாளிகள் பல னடைந்ததாகவும் அவர் குறிப்பிட் டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது