மெர்டேக்கா தலைமுறையினருக் கான தொகுப்புத் திட்டத்தின் பலன்கள் அனைத்தும் இரு பகுதிகளாக அறிமுகம் காணும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித் தார். 1950களில் பிறந்த சிங்கப் பூரர்கள் மெர்டேக்கா தலை முறைத் திட்டத்தில் இடம்பெறு வர். ஜூலை 1ஆம் தேதி அவர் களின் மெடிசேவ் கணக்கில் $200 நிரப்பப்படும். இது அவர் களுக்கான முதல் நிதியுதவி. 2023ஆம் ஆண்டு வரை இந்த வருடாந்திர பணம் நிரப்புதலை அவர்கள் தொடர்ந்து பெறுவர். இத்துடன் மெடிஷீல்ட் லைஃப் சந்தாவுக்கான உதவித்தொகை யும் நடப்புக்கு வரும். அந்த வருடாந்திர சந்தாத் தொகைக்கு ஐந்து விழுக்காடு கழிவு அறி முகம் காணும். இந்த உதவியைப் பெறுபவர் 75 வயதைக் கடக்கும் போது உதவித்தொகை 10 விழுக் காடாக அதிகரிக்கும்.
மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம்: ஜூலையிலும் நவம்பரிலும் பலன்கள் நடப்புக்கு வரும்
1 mins read

