ஆரோக்கிய வாழ்க்கையை மக்கள் பேண வேண்டும்

ஆரோக்கிய வாழ்க்கையை மக்கள் பேண வேண்டும்

1 mins read

சுகாதாரப் பராமரிப்பில் சிங்கப்பூர் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது கூடுதலாக செலவு செய்கிறது. இதேபோல் செலவை அதிகரித்துக்கொண்டே செல்வது தாக்குப்பிடிக்கக் கூடிய தல்ல என்று அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார். சுகாதாரப் பராமாரிப்பைக் கட்டுப்படியானதாக வைத்திருக்க சிறந்த வழி மக்கள் ஆரோக்கியமாக இருப்பதே. மக்கள் தொகை மூப்ப டைந்துவரும் வேளையில், ஆரோக் கியமற்ற வாழ்க்கைமுறை வாழ்க் கையின் தரத்தைப் பாதிக்கிறது என்றார் அமைச்சர் கான். 2010 முதல் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புச் செலவினம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகிவிட்டது.

2010ல் $11 பில்லியனாக இருந்த அச்செலவு, 2016ல் $21 பில்லியனாக அதிகரித்துள்ளது. அரசாங்கம் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கும் தொகை 2.4 மடங்காக, $3.9 பில்லியனிலிருந்து $9.3 பில்லியனாகக் கூடியது என்றார் அமைச்சர் கான். சுகாதாரப் பராமரிப்பில் ஆள் பலமும் உள்கட்டமைப்பும் மேம் படுத்தப்பட்டுள்ளது என்று தெரி வித்தார் அவர். 2010ஆம் ஆண்டிலிருந்து மருத்துவர்கள், தாதிகளின் எண்ணிக்கை முறையே 52 மற்றும் 44 விழுக்காடு அதிகரித்துள்ளது. மருத்துவப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு 300லிருந்து 500ஆக கூடியுள்ளது.