குழந்தைப் பராமரிப்புக்கு கூடுதல் மானியம்; விண்ணப்ப முறை எளிதாகிறது

கூடுதலாக குழந்தைப் பராமரிப்பு மானியங்களையும் எளிதான விண்ணப்ப முறைகளையும் குடும் பங்கள் எதிர்பார்க்கலாம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் முகம்மது ஃபைசால்ல் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கைக்குழந்தைகள், இளம் பிள் ளைகள் உள்ள வேலைக்குச் செல் லாத தாய்மாருக்கான குழந்தைப் பராமரிப்பு நிலையக் கட்டண மானிய காலம் நீட்டிக்கப்படுவது டன் $7,500க்கும் குறைவான குடும்ப வருமானமுள்ள தாய்மா ருக்கு கூடுதலாக மானியம் வழங் கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 5,000க்கும் அதிமான குடும்பங்கள் பலனடையும் என்றும் இணை பேராசிரியர் ஃபைசல் நேற்று நாடாளுமன்றத்தில் கூறி னார். குழந்தைப் பாரமரிப்பு ஆதரவு குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு அவர் பதிலளித்தார்.
மார்ச் 1 தேதியிலிருந்து வேலைக்குச் செல்லாத தாய்மார் ஆறு மாத காலத்துக்கு குழந்தைப் பராமரிப்பு நிலையக் கட்டண மானியம் 300 வெள்ளியும் கைக் குழந்தைப் பாரமரிப்பு நிலைய கட்டண மானியமாக 600 வெள்ளி யும் பெறுவர். தற்போது மூன்று மாத காலத்துக்கு இந்தக் கட்டண மானியம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (வலது) கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார் புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். படம்: இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்

24 Mar 2019

இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி

அட்மிரல்டி பிளேஸ் கடைத் தொகுதியில் உள்ள தற்போதைய சந்தை உட்லண்ட்ஸ் ஈஸ்ட் அக்கம்பக்க போலிஸ் மையத்துக்குப் பக்கத்தில் உள்ள இடத்துக்கு மாறுவது பற்றிய தகவலை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் சுற்றறிக்கையில் தமிழுக்குப் பதிலாக தவறுதலாக இந்தி மொழி அச்சடிக்கப்பட்டு இருந்தது. படம்: விஜயா கந்தசாமி ஃபேஸ்புக்

24 Mar 2019

சுற்றறிக்கையில் தமிழ் என்று எண்ணி தவறுதலாக இந்தி மொழி