கர்ப்பகால பிரச்சினைகளுக்கு ‘மெடி‌ஷீல்ட் லைஃப் நீட்டிப்பு’

கர்ப்பகால பிரச்சினைகளால் அவதியுறும் பெண்கள், கூடு தலான நிதி ஆதரவை எதிர்பார்க் கலாம். அதோடு, கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு பிரச்சினை உடையோர் ஆரம்பகட்டத்திலேயே பரிசோதனைக்கு உட்படுத்தப் படும் வசதி ஏற்படுத்தித் தரப் படும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு தொடர்பான பிரச்சினை களால் ஐந்தில் ஒரு கர்ப்பிணி பாதிக்கப்படுவதாக கணிக்கப் பட்டுள்ளது. 
இத்தகைய சில அனுகூலங் கள் அடுத்த மாதம் 1ஆம் தேதி யிலிருந்து கிடைக்கும். 
அப்போது 24 வகையான கர்ப்பகால மற்றும் பிள்ளைப்பேறு தொடர்பான பிரச்சினைகளுக் கான உள்நோயாளி சிகிச்சை களுக்கு ‘மெடி‌ஷீல்ட் லைஃப்’ காப்புறுதி நீட்டிக்கப்படும்.
இந்த மாற்றங்களால் ஆண்டுக்கு 4,000 நோயாளிகள் வரை பலனடைய முடியும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

‘ஸ்கிரீன் ஃபார் லைஃப்’ திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கட்டணக் கழிவுடன் கூடிய பரிசோதனை இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து, கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.
இந்நிலையில், கர்ப்பகாலத்தில் நிதியுதவி தொடர்பான விவ காரத்தை ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்தஃபர் டி சூசா முன்வைத்தார்.
முந்தைய கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரண மாக தனியார் காப்புறுதி நிறு வனங்களிலிருந்து மகப்பேறு தொடர்பான காப்புறுதியைப் பெறு வதில் சிரமத்தை எதிர் நோக்கும் கர்ப்பிணிகளுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலிக்குமா என திரு டி சூசா கடந்த அக்டோபரில் கேட்டிருந்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்