ஏப்ரல் 17ஆம் தேதி திறக்கும் ஜுவல் சாங்கி விமான நிலையம்

ஜுவல் சாங்கி விமான நிலையம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாகவே பொதுமக்கள் ‘ஜுவல் சாங்கி’ வளாகத்தைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பைப் பெறலாம். 

மார்ச் 12ஆம் தேதி காலை 6 மணி முதல் jewelpreview.com என்ற இணையத்தளத்தில் ஆர்வமுள்ளோர் பதிவு செய்து ஏப்ரல் 11 முதல் 16 வரை இதனை காணலாம். இதற்காக சுமார் 500,000 நுழைவுச்சீட்டுக்கள் கொடுக்கப்படும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது. பதிவு செய்யும் ஒவ்வொருவரும் நான்கு பேருக்காகப் பதிவு செய்யலாம்.

‘ஜுவல் சாங்கி’யின் திறப்பு விழா குறித்து போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். பத்து மாடிகளைக் கொண்ட ‘ஜுவல் சாங்கி’ கட்டடத்தில் 280க்கும் அதிகமான கடைகள் திறக்கப்பட உள்ளன.