தீச்சம்பவத்தால் ஜாலான் ராஜா அலுவலகத்தில் சேதம்

பாலஸ்டியர் ரோட்டுக்கு அருகிலுள்ள அலுவலகம் ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தால் கணினிகள், மேசைகள் உள்ளிட்ட பல பொருட்கள் சேதமடைந்தன.

2 ஜாலான் ராஜாவில் இருக்கும் அந்தக் கட்டடத்தில் இச்சம்பவம் நேர்ந்தது. உதவிக்கான அழைப்பு வியாழக்கிழமை ( மார்ச் 7) காலை 7.30 மணிக்கு வந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றது குடிமைத் தற்காப்புப் படை. தீயில் கிட்டத்தட்ட 200,000 வெள்ளி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.