ஆகாயப் போக்குவரத்து பொறுப்புகள்: சிங்கப்பூர் கடுமையாக அனுசரிக்கும்    

  அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பால் சிங்கப்பூருக்கு அளிக்கப்பட்டுள்ள ஆகாயப் போக்கு வரத்து நிர்வாகப் பொறுப்புகளை சிங்கப்பூர் 
கடுமையாக அனுசரிக்கும் என்றும் அதில் உயர்ந்த தரநிலையை அடைவதற்கும் ஆற்றலை மேம்படுத்துவதற்கும் அதிக முதலீடுகள் செய்யப்படும் என்றும் தற்காலிக போக்குவரத்து அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கும் அதன் அண்டை நாடுகளான மலேசியா வுக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே நடப்பில் உள்ள ஆகாயவெளி விவகாரங்கள் தொடர்பில் பேசிய டாக்டர் விவியன், இரு நாடுகளும் தற்போது சிங்கப்பூர் ஆகாயப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளால் நிர்வகிக்கும் தங்கள் ஆகாயவெளி நிர்வாகத்தைத் திரும்பத் தரும்படி மலேசியாவும் இந்தோனீசியாவும் கேட்டு வருகின்றன.

1946ஆம் ஆண்டு முதல் உயர்தரத்திலான பாதுகாப்பு, ஆற்றல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆகாயப் போக்கு வரத்துச் சேவைகளை சிங்கப்பூர் வழங்கி வருகிறது. அந்தப் பொறுப்பை சிங்கப்பூர் தொடர்ந்து பெருமையுடன் நிறைவேற் றும்,” என்றும் டாக்டர் விவியன் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டில் சிங்கப்பூர் விமானப் பயண தகவல் மண்டலத்தில் 740,000 விமானப் பயணங்களை சிங்கப்பூர் நிர்வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது