பழைய வாடகை வீட்டு புளோக்குகளில் மேம்பட்ட காற்றோட்டம், விளக்கொளி         

1960களிலும் 70களிலும் கட்டப்பட்ட பழைய வாடகை வீட்டு புளோக்குகளில் இயற்கை விளக்கொளி வசதியை வீவக மேம்படுத்தும். அங் மோ கியோ அவென்யூ 1 புளோக் 217, ஹாலந்து குளோஸ் புளோக் 1 ஆகியவற்றில் கடந்த 2004ல் இயற்கை விளக்கொளி மேம்படுத்தப்பட்டது.
அதனை அடுத்து புக்கிட் மேரா, காலாங், பிடோக் போன்ற பழைய புளோக்குகளில் இயற்கை விளக்கொளியை மேம்படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டில் தொடங்கும். ஓரறை அல்லது ஈரறைகள் கொண்ட வாடகை வீடுகளுக்கு இடையே பொதுவான நடைபாதை இருக்கும். அதில் மின் தூக்கி நிற்கும் இடங்கள், படிக்கட்டுகள் இருக்கும் இடங் கள் ஆகியவற்றைத் தவிர நடைபாதையின் பெரும்பகுதி இருட்டாகவே இருக்கும்.

மேலும் இந்தக் கட்டடங்களில் காற்றோட்ட வசதியை மேம்படுத்தும் வகையில் நடைபாதையில் அதிக இடை வெளிகள் அமைக்கப்படும் என்று தேசிய வளர்ச்சிக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங் தெரிவித்தார்.
இந்தப் பணிகள் நடக்கும்போது அதன் குடியிருப்பாளர் கள் அதே புளோக்கில் உள்ள காலியாக உள்ள மற்ற வீடுக ளுக்கோ அல்லது அருகில் உள்ள புளோக்குகளில் உள்ள வீடுகளுக்கோ மாற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்