சிங்கப்பூர்-மலேசியா ரயில்திட்டங்களில் எவ்வித முன்னேற்றமும் இல்லை  

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இரு ரயில் திட்டங்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தற்காலிக போக்குவரத்து அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
கடந்த ஆண்டில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பிறகு கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தின் அடுத்த கட்டம் பற்றி மலேசியாவிடமிருந்து எவ்வித பரிந்து ரையும் கிடைக்கவில்லை என்று டாக்டர் விவியன் நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கினார்.
மலேசியாவின் விருப்பப்படி, இரு தரப்புகளும் 2020ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை அதிவேக ரயில் திட்டத்தை ஈராண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கமுடிவு செய்தன. அந்த வகையில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட் டின்படி மலேசியா, $15 மில்லியனை திட்டத்தை திடீரென நிறுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகையாக வழங்கியது. 
“இந்த இடைப்பட்ட காலத்தில், அதிவேக ரயில் திட் டத்தை முன்னெடுத்துச் செல்லும் வழிகளை இருதரப்பு களும் ஆராயலாம் என்று மலேசியா யோசனை கூறியது. ஆனால், இதுவரை அதன் தொடர்பில் எவ்வித பரிந்துரை களும் இல்லை,” என்று அமைச்சர் சொன்னார்.
சிங்கப்பூரையும் ஜோகூர் பாருவையும் இணைக்கும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி பாதை விரிவாக்கத் திட்டத்திலும் மலேசியத் தரப்பிடமிருந்து எவ்வித பரிந்துரை யும் கிடைக்கவில்லை. இதனால் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தொடங்கப்படவிருந்த எம்ஆர்டி ரயில் திட்டமும் தாமதமாகலாம் என்றார் அமைச்சர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது