போக்குவரத்து மேம்பாட்டுச் செலவுகள் $11.5 பில்லியனாக உயர்ந்தது

சிங்கப்பூர் போக்குவரத்தின் உள் கட்டமைப்பை விரிவாக்குவதிலும் மேம்படுத்துவதிலும் பல ஆண்டு கள் முதலீடு செய்யப்பட்டு வந்து உள்ள நிலையில், நிதி நிலைத் தன்மை குறித்து தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் விவி யன் பாலகிருஷ்ணன் நேற்று நாடா ளுமன்றத்தில் பேசினார்.
கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்துக்கான செலவு இரண்டு மடங்குக்கும் அதிகமாக கூடியுள்ளது. 
2009ல் $5.4 பில்லியனாக இருந்த இத்தொகை 2019ல் $11.5 பில்லியனாகி உள்ளது என்று டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.
உதாரணமாக, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை தடம் இந்த ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும். இதன்மூலம், எம்ஆர்டி கட்டமைப்பில் 32 நிலை யங்களும் 43 கிலோ மீட்டர் ரயில் பாதையும் அதிகரிக்கின்றன. இது ஒரு மில்லியன் பயணிகளுக்குச் சேவையாற்றும்.
வரும் 2030ஆம் ஆண்டு வாக் கில் வட்ட ரயில் பாதைத் தடத்தின் 6வது பகுதி, ஜூரோங் வட்டார ரயில் பாதைத் தடம், தீவுக் குறுக் குப் பாதை ரயில் பாதைத் தடம் ஆகியவை செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
கடந்த ஐந்தாண்டுகளில் 200 ரயில்களை பயணத்தில் சேர்த்துள் ளோம். பேருந்து சேவை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1,000க்கும் அதிகமான பேருந்துகளையும் அறி முகப்படுத்தியுள்ளோம். 
ஆனால், செலவைக் குறைத்து, பணத்துக்கான மதிப்பை அதிக பட்சமாக்க வேண்டும். நிதி நிர்வாக ஒழுக்கத்தை நாம் கடைப் பிடிக்க வேண்டும் என்றார் அமைச் சர் விவியன்.
செலவைக் குறைப்பதில் திட்ட உருவாக்குநர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகளையும் அவர் குறிப்பிட்டார்.