2025ல் ‘ஹியூம்’  ரயில் நிலையம்

டௌன்டவுன் ரயில் பாதையில் ‘ஹியூம்’ ரயில் நிலையம் 2025ல் திறக்கப்படும் என்று போக்குவரத்து மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி நேற்று கூறினார்.
வளர்ச்சியின் வேகம், அந்தப் பகுதி பயணிகள் எண்ணிக்கை அளவு போன்றவற்றால் 2015ல் டௌன்டவுன் ரயில் பாதையின் இரண்டாம் கட்டம் செயல்படத் தொடங்கியபோது அது திறக்கப்பட வில்லை. அப்பகுதியின் பழைய ரயில் பாதை தற்போது மறுசீரமைக் கப்பட்டுள்ளது. இந்த மேம்பாடுக ளால் ஹியூம் நிலையத்தைத் திறப் பதை நியாயப்படுத்த போதிய பய ணிகள் இருப்பர் என்றார்அமைச்சர்.