நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டம் 2040ன் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது

நிலப் போக்குவரத்துப் பெருந்திட் டம் 2040 குறித்து ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று தற்காலிக போக்குவரத்து அமைச்சர் விவியன் பால கிருஷ்ணன் நேற்று போக்குவரத்து அமைச்சுக்கான நிதிஒதுக்கீட்டு விவாத்தின்போது தெரிவித்தார். 
அனைவரையும் உள்ளடக்கிய, நன்கு இணைக்கப்பட்ட, வேகமான போக்குவரத்துக் கட்டமைப்புக்கான ஒன்பது பரிந்துரைகளை குழு பிப்ரவரி மாதம் முன்வைத்தது.
அவை, வீடமைப்புப் பேட்டை களுக்கு 20 நிமிடம்,  நகரமையத் துக்கு 45 நிமிடம், அனைவருக்கும் போக்குவரத்து ஆகிய மூன்று பிரிவுகளுடன் ஆரோக்கியமான வாழ்க்கை, பாதுகாப்பான பயணங் கள் என்ற இலக்கையும் கொண்டு உள்ளன. 

ஆக அருகிலுள்ள அக்கம்பக்க குடியிருப்புப் பேட்டை மையத்துக் குச் செல்லும் அனைத்து பயண நேரத்தையும் 20 நிமிடங்களாக்க வும், அதிக உச்சநேரப் பயணம் 45 நிமிடங்களுக்குள் இருக்கவும் செயல்படுமாறு குழு அரசாங்கத் திற்கு பரிந்துரைத்துள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய போக்குவரத்துக்கு, அக்கறையும் பரிவுமிக்க போக்குவரத்து கலாசா ரத்தை வளர்ப்பதிலும், பெரும்பா லான போக்குவரத்து பாதைகளை தடைகளற்றதாக்குவதையும் இலக் காகக் கொண்டு அரசாங்கம் செயல்பட வேண்டும்.