2030க்குள் 30% ஊட்டச்சத்து தேவை உள்ளூரில் உற்பத்தி 

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் ஊட்டச்சத்து தேவை களில் 30 விழுக்காட்டை உள் ளூரில் தயாரிக்க இலக்கு கொண் டுள்ளது சிங்கப்பூர் உணவு அமைப்பு என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
“நமது தேவைக்கு ஏற்ப 90 விழுக்காட்டு உணவுகளை நாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறோம். அந்த வகையில் உலகளாவிய உணவுச் சந்தை சந் திக்கும் அபாயங்களையும் சிங்கப் பூர் எதிர்கொள்ள நேரிடுகிறது.

“போக்குவரத்துப் பாதைகளில் இடையூறுகள், இறக்குமதி தடை கள், பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் போன்றவை அந்த அபாயங்களில் சில,” என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரின் ஊட்டச்சத்து தேவைகளில் 50 விழுக்காட்டைப் பழங்களும் காய்கறிகளும் 25 விழுக்காட்டைப் புரதங்களும் 25 விழுக்காட்டை ரொட்டி, பால் போன்றவையும் நிவர்த்தி செய்கின் றன என்று சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வு கூறுகிறது.
பழங்கள், காய்கறிகளில் 20 விழுக்காட்டையும் மாமிசம், மீன் போன்றவற்றில் கிடைக்கும் புரதங் களில் 10 விழுக்காட்டையும் உள் ளூரில் உற்பத்தி செய்வதுதான் இலக்கு. சிங்கப்பூர் தற்போது 10 விழுக்காட்டுக்குக் குறைவாகவே ஊட்டச்சத்து உணவுகளை உள் ளூரில் உற்பத்தி செய்கிறது.