கேலாங், குவீன்ஸ்டவுன் பகுதிகளை நகருடன் இணைக்கும் சைக்கிள் பாதைகள் அடுத்த ஆண்டுக்குள் திறக்கப்படும்

கேலாங், குவீன்ஸ்டவுன் பகுதிகளில் உள்ள சைக்கிளோட்டிகளும் தனிநபர் உந்து நடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்துவோரும் இனி நகருக்கு நேரடியாக வந்துவிடலாம். இத்திட்டம் சீராக இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கு நம்பிக்கை ஏற்பட்டால், மேலும் ஆறு பகுதிகளில் இதுபோன்ற திட்டம் அமலாக்கப்படும்.

முதலில் இவ்விரு பகுதிகளிலிருந்தும் நகருக்குச் செல்லும் சைக்கிள் பாதைகள் அடுத்த ஆண்டுக்குள் அமைத்து முடிக்கப்படும் என்று போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

2030ஆம் ஆண்டுக்குள் சாலைகள் அல்லாத சைக்கிள் பாதைகளைக் கொண்ட முழுமையான கட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்ற சிங்கப்பூரின் குறிக்கோளுடன் இது ஒத்துப்போகிறது என்று அவர் கூறினார்.