காருடன் மோதி மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

அங் மோ கியோ வட்டாரத்தில் 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி கார் ஒன்றில் மோதி உயிர் இழந்தார். 

கவனக்குறைவாக காரை ஒட்டியதன் காரணமாக விபத்தை உண்டாக்கிய அந்த 41 வயது கார் ஒட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலிசார் தெரிவித்துள்ளனர். 

அங் மோ கியோ அவென்யூ 8க்கும் அங் மோ கியோ செண்ட்ரலுக்கும் இடையே உள்ள சாலை சந்திப்பில் நடந்த இந்த விபத்து குறித்து நேற்று மாலை 5.30 மணி அளவில் போலிசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.   

காரில் இருந்த 40 வயது பெண் பயணி கூ தெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் சுயநினைவோடு இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. கார் ஓட்டுநருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அறியப்படுகிறது.