உடற்குறையுள்ளோர் விளையாட்டுகளில் அதிகம் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவர்        

சிறப்புத் தேவை பள்ளிகள், உடற்குறையுள் ளோருக்கான நிலையங்கள் ஆகியவற்றில் உள்ளவர்கள் விளையாட்டு களில் அதிகம் ஈடுபட சிங்கப்பூர் விளையாட்டு மன்றம் ஊக்கப்படுத்தும் என்றும் அவர்களுக் குப் பயிற்சியளிக்க நிபுணத்துவ பயிற்றுவிப்பாளர்கள் அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இத் தகைய பத்துப் பள்ளிகளிலும் நிலையங்களிலும் இந்த முயற்சியை நடைமுறைப்படுத்த மன்றம் திட்டமிட்டுள்ளது.
“தற்போது, சிறப்புக் கல்வி பள்ளிகளிலும் உடற்குறையுள் ளோர் நிலையங்களிலும் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோர் விளையாட்டு நடவடிக்கைகளை ஏற்று நடத்தும் ஆற்றல்களை மேம்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
“அவர்கள் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து மாணவர்களின் விளையாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகளைக் கூட்டாக உருவாக்குவார்கள்,” என்றார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்