மத்திய நகருடன் குவீன்ஸ்டவுன், கேலாங் பகுதிகளை இணைக்கும் சைக்கிள் பாதைகள்        

கேலாங், குவீன்ஸ்டவுன் பகுதிகளில் உள்ள சைக்கிளோட்டி களும் தனிநபர் உந்துநடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்து வோரும் இனி நகருக்கு இணைப்பு சைக்கிள் பாதை மூலம் நேரடியாக வந்துவிடலாம். இந்த முறை வெற்றியளித்தால் மேலும் ஆறு பகுதிகளுக்கு இதுபோன்ற திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்றார் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின்.
முதலில் இந்த இரு பகுதிகளில் சைக்கிள் பாதைகள் அடுத்த ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்று அமைச்சர் லாம் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். 
2030ஆம் ஆண்டுக்குள் சாலைகள் அல்லாத சைக்கிள் பாதைகளைக் கொண்ட முழுமையான கட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்ற சிங்கப்பூரின் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்படு கிறது என்றார் டாக்டர் லாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆள் நடமாட்டமற்ற டர்ஃப் கிளப் அவென்யூவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 May 2019

அச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்

சாக்கியமுனி புத்த கயா ஆலயத்தில் புத்த சிலையின்மீது தங்கத் தகடுகள் வைத்து பலரும் வழிபட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 May 2019

நிம்மதி நல்கும் விசாக தினம்