சுவா சூ காங் விளையாட்டு மையம் 2020ஆம் ஆண்டில் திறக்கப்படும்        

குடியிருப்பாளர்களின் தேவைகளுக்கேற்ப மேம்படுத்தப்பட்ட சுவா சூ காங் விளையாட்டு மையம் அடுத்த ஆண்டு கட்டங்கட்டமாகத் திறக்கப்படும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ (படம்) தெரிவித்தார்.
அத்துடன் ஈசூனில் உள்ள தற்போதைய விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் திட்டமும் உண்டு என்றும் அதற்காக சிங்கப்பூர் விளையாட்டு மன்றம் உத்தேச மேம்பாடுகள் பற்றி பேச உள்ளூர் சமூகத் தலைவர்களைச் சந்தித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
“விளையாட்டு மையத்தில் தாங்கள் பார்க்க விரும்பும் மேம்பாடுகள் பற்றி 700 குடியிருப்பாளர்கள் தங்கள் கருத்து களை சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்திடம் தெரிவித்துள் ளனர் என்றும் அடுத்த ஆண்டு மறுசீரமைக்கப்பட்ட நீச்சல் வளாகத்தில் கூரையுடன் கூடிய பயிற்சி குளமும், புதிய நீர் விளையாட்டுச் சாதனங்களும் நீர்சறுக்குகளும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படும்.
“குளிர்சாதன வசதியுள்ள விளையாட்டு அரங்கம், பெரிய அளவிலான உடற்பயிற்சிக்கூடம், நடன அரங்கு, புதிய துடிப்பான சுகாதார ஆய்வுக்கூடம் போன்றவையும் 2021ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்றார் அமைச்சர் ஃபூ.