தனிநபர் உந்துநடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்துவோரும் பாதசாரிகளும் பயன்படுத்தும் பாதைகளில் பாதுகாப்பு அம்சம் பற்றிய கவலை பலருக்கும் உள்ளது. கவனக் குறைவாகச் சாதனத்தைப் பயன்படுத்துவோரைத் தடுக்க மேலும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவேண்டும் என்று கூறியுள்ளார் போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின். இதுவரை உள்ள அமலாக்க நடவடிக்கைகளுடன் கண் காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும் என்று அவர் கூறினார். உந்து நடமாட்டச் சாதனங்கள் சட்டவிரோதமான முறையில் அதிகமாகப் பயன்படுத்தும் இடங்களில் அந்த கேமராக்கள் முதலில் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலப் போக்கு வரத்து ஆணையம் அந்த முயற்சியில் ஈடுபடும்.
உந்து நடமாட்டச் சாதனத்தைக் கண்காணிக்க கேமராக்கள்
1 mins read

