அரும்பொருளகங்களை உடற்குறையுள்ளோரும் முதியோரும் பயன்படுத்த ஏற்பாடுகள்

சிங்கப்பூரின் அரும்பொருளகங்கள் சக்கரநாற்காலி பயன்பாட்டுக்கு ஏற்ப அகலமான நடைபாதைகள், மின்தூக்கிகள் போன்ற வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரிலுள்ள அரும்பொருள கங்களும் மரபுடைமைக் கழகங்க ளும் முதியவர்கள், உடற்குறை யுள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளதா என்பது பற்றி ஆராயப்படவுள்ளது. 
சாங்கி தேவாலய அரும்பொருள கம், புக்கிட் சாந்துவில் உள்ள ரிஃப்ளெக்ஷன்ஸ், பெரனாக்கான் அரும்பொருளகம், சிங்கப்பூர் அஞ் சல்தலை அரும்பொருளகம் ஆகி யவை சக்கரநாற்காலி பயன்பாட் டுக்கு உகந்தவாறு அகலமான நடைபாதைகள், மின்தூக்கிகள் போன்ற வசதிகளுடன் மறுசீரமைக் கப்பட்டு வருகின்றன. மேலும் குழந்தைகளுக்காகப் பாலூட்டும் அறைகள், உடற்குறையுள்ளோ ருக்கு ஏற்ற கழிவறைகள் போன்ற வசதிகளும் இங்கு அமைக்கப் படுகின்றன.