இறைச்சி அரைக்கும் கருவியில் ஊழியரின் கை சிக்கியது 

பேரங்காடி ஊழியர் ஒருவரின் இடது கரம் இறைச்சி அரைக்கும் கருவியில் சிக்கிக்கெண்டதை அடுத்து அவர் காயமுற்றார். இந்தச் சம்பவம் 284 புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 3ல் உள்ள ‘ஜாயண்ட் எக்ஸ்பிரஸ்’ பேரங்காடியில் நேற்று முன்தினம் அதிகாலை நிகழ்ந்தது.  
இறைச்சி அரைக்கும் கருவியிலிருந்து அந்த 53 வயது பெண்மணியின் கரத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளால் விடுவிக்க முடியாமல் போக, அவரை அப்படியே தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 
இந்தச் சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை நடத்துகிறது. பாதிக்கப்பட்ட ஊழியர் படுகாயம் அடைந்திருப்ப தாகவும் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவ தாகவும் அறியப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஊழியரின் உடல்நிலை குறித்து ஜாயண்ட் பேரங்காடியை நடத்தும் டெய்ரி ஃபார்ம் நிறுவனம் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது.