அமைச்சர் ஜோசஃபின் டியோ: அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்

பெண்களை அரசியலில் ஈடுபட வைக்க இன்னும் அதிக முயற்சி கள்  எடுக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரி வித்துள்ளார்.
ஆனால் சிங்கப்பூர் கலாசாரத் தை மனதில் கொண்டு இந்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்  என்று கூறிய திருமதி டியோ, சிங்கப்பூர் மக்கள் தாமாகவே அரசியலுக்கு முன்வரும் சாத்தியம் குறைவு என்பதைச் சுட்டினார்.
“அமெரிக்க ஐடல் நிகழ்ச்சி யைப் பார்த்தால் அதில் போட்டி யிடுபவர்கள் நான்தான் அடுத்த அமெரிக்க ஐடல் என்று மார்தட்டி கூறுவர். சிங்கப்பூரர்கள் இவ்வாறு செய்யமாட்டார்கள்,” என்றார் திருமதி டியோ.
“அரசியலில் ஈடுபட அழைப்பு விடுத்த பிறகே சிங்கப்பூரர்கள் அரசியலுக்கு வரும் சாத்தியம் அதிகம். அவர்களாகவே அரசிய லுக்கு வருவதில்லை. ஆண்களே இப்படி என்றால் பெண்கள் பற்றி சொல்லத் தேவையில்லை,” என்றார் அமைச்சர் டியோ.
சமுதாயத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல் படும் பெண்களை அடையாளம் காண  அனைவரும் இணைந்து முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அரசியலுக்கு வர அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் திருமதி டியோ தெரிவித்தார்.
மக்கள் செயல் கட்சியின் மகளிர் அணித் தலைவியான திருமதி டியோ, அந்த அணியின் அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.