கல்விமுறை மேம்பாட்டில்  சமூகத்துக்கும் பங்கு உண்டு

உயர்நிலைப்பள்ளியில் நடப்புக்கு வர உள்ள பாட அடிப்படையிலான வகைப்பாட்டு முறை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய எந்த ஒரு பின்னடைவையும் தடுக்கும் பொறுப்பு சமூகத்துக்கு இருக்கிறது என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரி வித்து இருக்கிறார். 
அத்தகைய தன்மையை அகற்றுவதில் தொடக்கப்பள்ளி களில் வெற்றி பெற்று இருக்கும் சிங்கப்பூர், உயர்நிலையிலும் அந்த வெற்றியைச் சாதிக்க முடி யும் என்று அமைச்சர் கூறினார். 
மாணவர்களுக்குச் சிரமம் ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும் அது சமூகத்தின் எதிர்விளைவு என் றும் திரு ஓங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் உயர்நிலைப் பள்ளியில் தரம் பிரிப்பு முறைக் குப் பதிலாக பாட அடிப்படை யிலான வகைப்பாட்டு முறை 2024ல் நடப்புக்கு வருகிறது. 
அந்தப் புதிய முறை, வேறு பட்ட வடிவில் மாணவர்களிடம் தொடர்ந்து பின்னடைவை ஏற் படுத்தும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்து தொடர் பில் அமைச்சர் கருத்துரைத்தார். 
பள்ளிக்கூடங்களில் மாண வர்களின் செயல்திறன் அடிப் படையிலான பின்னடைவை, ஒவ் வொரு மாணவருக்கும் வெவ் வேறான ஆற்றல்களும் தேர்ச்சி களும் இருக்கின்றன என்பதை அங்கீகரித்து அதன்மூலம் அகற் றுவதற்கான பொறுப்பு சமூகத் திற்கு இருக்கிறது என்று அமைச்சர் விளக்கினார். 
சிங்கப்பூரின் கல்வி முறை, மாணவர்களின் ஆற்றலையும் பலத்தையும் பேணி வளர்ப்பதற்கு முயல்கிறதே தவிர அவர்களை முத்திரை குத்தி பிரிப்பதற்காக அல்ல என்றார் அமைச்சர்.