சாலைகளில் மோசமாக நடப்போர் குறித்த புகார்கள் அதிகரிப்பு 

சாலைகளில் மோசமாக நடந்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. பொது மக்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையில் போக்குவரத்து போலிசார் கடந்த ஆண்டில் 2,500 பேருக்கு அழைப்பாணை கொடுத் துள்ளனர். 2017ல் இந்த எண் ணிக்கை 1,700 ஆக இருந்தது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டுள்ளது. 2015ல் போக்குவரத்து போலிசார் மொத் தம் 152,700 அழைப்பாணைகளைக் கொடுத்துள்ளனர். இது கடந்த 2018ல் 181,000 ஆகக் கூடியுள்ளது.
பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய சம்பவங்கள் குறித்து ஐந்தாண்டுகளுக்கு முன் அதாவது 2014ல், 6,900 கடிதங் களைப் பொதுமக்களிடமிருந்து போக்குவரத்து போலிஸ் பெற்றது.  இந்த எண்ணிக்கை 2018ல் இரண்டு மடங்குக்கும் அதிகமாகி 18,500 ஆக உயர்ந்துள்ளது. 
பொதுமக்களிடமிருந்து பெறப் பட்ட பெரும்பாலான கருத்துகள் சிங்கப்பூர் போலிஸ் படையின் இணையக் கருத்தறியும் தளம் மூலம் திரட்டப்பட்டதாக போக்கு வரத்து போலிசின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். 
காணொளிகளும் புகைப்படங் களும் சில கடிதங்களுடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.