மலேசிய இரவு விடுதியில் இரு சிங்கப்பூரர்கள் கைது

கோலாலம்பூரின் ஜாலான் புக்கிட் பிந்தாங் பகுதியிலுள்ள ஓர் இரவு விடுதியை நேற்று அதிகாலை மலேசிய போலிஸ் சோதனை செய்ததில் இரு சிங்கப்பூரர்கள் பிடிபட்டனர்.
காலை 2.45 மணிக்கு நடத்தப்பட்ட இச்சோதனையில் மொத்தம் 52 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட இரு சிங்கப்பூரர்களுடன் மேலும் இருவர் ஒரே அறையில் போதைப்பொருள் கலந்த பானங்களுடன் இருந்ததாக தலைமை போலிஸ் அதிகாரி மஸ்லான் லஸிம் கூறினார். இரவு விடுதியில் போதைப் பொருள் இருப்பதை போலிசாரின் நாய்கள் கண்டுபிடித்தன. இரவு விடுதியில் இருந்த 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட 81 பேரை போலிசார் சோதித்ததாகவும் 37 பேர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக தெரிய வந்ததாகவும் கூறப்பட்டது. கைதானோர் போலிஸ் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.