சமூகத்தை இணைக்கும் ‘மார்சிலிங் கேர்ஸ்’ திட்டம்

சமூகத்தினரிடையே அக்கறையை யும் நட்புணர்வையும் வளர்க்கும் நோக்கில் நேற்று பிரதமர் லீ சியன் லூங் புதிய திட்டம் ஒன்றை மார்சிலிங்கில் தொடங்கி வைத் தார். வட்டாரத்தில் இருக்கும் வசதி குறைந்த குடியிருப்பாளர் களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க ‘மார்சிலிங் கேர்ஸ்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
இதனை நேற்று மார்சிலிங் பூங்காவில் பிரதமர் லீயுடன் மார்சிலிங்-யூடி குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர்கள் லாரன்ஸ் வோங், ஸாக்கி முகம்மது, ஓங் டெங் கூன், அலெக்ஸ் யாம் ஆகியோரும் சேர்ந்து துவக்கி வைத்தனர்.   

மார்சிலிங் அடித்தள தொண் டூழியர்களாலும் சமூகப் பங்காளி களாலும் நடத்தப்பட்டு வரும் இத் திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கான ஆங்கில, கணிதப் பாடங்களுக் கான துணைப்பாட வகுப்புகளும் குடும்பங்களுக்கு உதவி நல்க சமூக சேவை மையமும் அடங் கும். அடுத்த ஈராண்டுகளில் தீவில் அமையவிருக்கும் முதல் நான்கு சமூக இணைப்பு மையங் கள் குறித்துச் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ சென்ற செவ்வாய்க்கிழமை அறி வித்திருந்தார். அவற்றில் ஒன்று மார்சிலிங்கில் கட்டப்படவுள்ளது.