ராணுவப் பயிற்சி பாதுகாப்பில் கூடுதல் கவனம்

சிங்கப்பூர் ஆயுதப் படையினரில் கிட்டத்தட்ட 3,500 ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் 12 கிலோமீட்டர் அணிவகுப்புடன் தங்களின் அடிப்படை ராணுவப் பயிற்சியை நிறைவேற்றினர். வீரர் களின் பாதுகாப்பு கருதி முந் தைய வீரர்களுக்கு இருந்து வந்த 24 கிலோ மீட்டர் பயணத்தைக் காட்டிலும் இது குறைந்துவிட்டதை சிங்கப்பூர் ராணுவம் சுட்டியது. ஐந்து கிலோமீட்டரில் தொடங்கி வீரர்கள் மெல்ல மெல்லக் கூடுதல் தூரமுடைய பயணங் களை மேற்கொள்வது வாடிக்கை. இருப்பினும் ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு ராணுவப் பயிற்சி யின்போது தயார்நிலை தேசிய சேவையாளரும் நடிகருமான அலொய்‌ஷியஸ் பாங் இறப்புக்குப்பின் இரு வாரங்களுக்கு ராணுவப் பயிற்சிகள் நிறுத்தப்பட்டன. முகாம் பயிற்சிகள் நடை பெற்ற காலகட்டமும் குறைக்கப்பட்டோ ரத்து செய்யப்பட்டோ இருந்தன.