சுற்றுப்பயணி வழிகாட்டிகள் சங்கம் மீது தரவுமீறல் விசாரணை 

சுற்றுப்பயணி வழிகாட்டிகள் சங்க உறுப்பினர்களின் தனிநபர் தரவு விவரங்கள் அதன் இணையத்தளத் தில் வெளியிடப்பட்டிருந்ததன் தொடர்பில் தனிநபர் தகவல் பாது காப்பு ஆணையம் (பிடிபிசி) விசாரணை மேற்கொண்டுள்ளது.
சங்கத்தின் 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் தனிநபர் தகவல் கள் இவ்வாறு இணையத்தளத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்துக் கிடைத்திருந்த தகவலைக்கொண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சங்கத்தின் இணையத் தளத்தைச் சென்ற வாரம் பார்த் ததில் உறுப்பினர்களின் அடை யாள அட்டை, வாகன உரிமம் ஆகியவற்றின் படங்கள் இடம்பெற் றிருந்தன.

சரிபார்ப்பு காரணங்களுக்காகத் தான் இப்படங்கள் பயன்படுத்தப் பட்டதாகவும் இணையத்தளத்திற்கு வருபவர்கள் சங்கத்தில் உறுப் பினர்களாக இருக்கும் சுற்றுப் பயண வழிகாட்டிகளைத் தேடு வதற்காக இந்த அம்சம் பயனுள்ள தாக இருக்கும் என்றும் பேச்சாளர் கூறினார். அமைப்புகள் வாடிக்கை யாளர்களின் தனிநபர் தரவுகளைப் பாதுகாக்க முறையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவை இல்லாத பட்சத்தில் அதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் பிடிபிசி அறிவுறுத்தி உள்ளது.
தனிநபர் தரவுகளைச் சேகரிக் கும் அமைப்புகள் தங்களின் தரவு பாதுகாப்பு முறைகளையும் அவற் றைத் தக்க வைத்துக்கொள்வதற் கான கொள்கையை மறு ஆய்வு செய்யவும் பிடிபிசி வலியுறுத்தியது.

இச்சம்பவம் தொடர்பில் சங்கம் உண்மையிலேயே தவறு செய்துவிட் டதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
தகவல் இணையத் தளத்தில் கிடைக்கக்கூடியதாக உள்ளதை அறிந்ததும் சங்கத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுடன் தொடர்பு கொண்டு அத்தகவல் கிடைப்பதற் கான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Loading...
Load next