ஹெச்ஐவி பெயர்ப்பட்டியல் கசிவு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர் லெர் டெக் சியாங் நீதிமன்றத்தில் முன்னிலையானார்

ஹெச்ஐவி பெயர்ப்பட்டியல் கசிவு தொடர்பான சம்பவத்தின் மத்தியில் உள்ள அமெரிக்கர் மிக்கி ஃபெபேரா புரோச்செஸின் காதலரான 36 வயது மருத்துவர் லெர் டெக் சியாங் இன்று உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஏமாற்ற துணை புரிந்ததற்காகவும் அரசாங்க ஊழியரிடம் போலி வாக்குமூலம் கொடுத்ததற்காகவும் அவருக்கு ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்கு எதிராகவும் தண்டனைக்கு எதிராகவும் அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

மேல்முறையீட்டு வழக்கின் விசாரணைக்காக இன்று காலை உயர் நீதிமன்றத்தில் அவர் முன்னிலையானார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்