பொய்ச் செய்தி பரவலை முறியடிக்க கூட்டு முயற்சி

பொய்ச் செய்திகளைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் எடுத்து வரும் சட்ட நடவடிக்கைகள் மட் டும் போதாது என்றும் சிங்கப் பூரை இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க ஒவ்வொரு வரும் தங்களது பங்கைச் செய்ய வேண்டும் என்றும் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
பொய்யான தகவல்களுக்கும் உண்மை நிலவரத்துக்கும் இடை யிலான வேறுபாட்டை நன்கு தரம் பிரித்துப் பார்க்கக்கூடிய இணையவாசிகளைப் பெற்றிருப் பதே தற்காத்தலின் முக்கிய அம்சம் என்றார் அவர்.

“வேண்டுமென்றே இணையத் தில் பொய்களைப் பரப்பி விடும் செயல்களைத்  தடுக்கப் போது மான சட்டம் இயற்ற நாம் தயா ராகி வருகிறோம். ஆனால், இது மட்டுமே எல்லாவற்றையும் சரி செய்துவிட முடியாது என்பது நமக்குத் தெரியும்.
“இணையத்திலும் சமூக ஊட கங்களிலும் பரவும் தகவல்களின் நேர்மை மற்றும் நம்பகத்தன் மையைப் புரிந்துகொள்வது என் பது இணையவாசிகளிடமே உள் ளது,” என்றார் இணையப் பாது காப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான எஸ் ஈஸ்வரன்.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் நேற்றுக் காலை நடை பெற்ற இணைய மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு அமைச்சர் பேசினார்.
சிறந்த இணைய வழக்கங் களை ஊக்குவிக்கும் பிரசாரம் ஒன்று இந்நிகழ்வில் தொடக்கம் கண்டது. கிட்டத்தட்ட 300 பெற் றோர்கள், கல்வியாளர்கள் ஆகி யோருடன் பொதுமக்களும் இம் மாநாட்டில் பங்கேற்றனர்.