கட்டுமான வேலையிட மரணங்கள்: உடனடி பாதுகாப்பு மறுபரிசீலனைக்குக் கோரிக்கை

சிங்கப்பூர் குத்தகையாளர்கள் சங்கம், அண்மையில் வேலை இடங்களில் உயிர்பலி விபத்துகள் அதிகம் நிகழ்ந்து இருப்பதால் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. 
கட்டுமான நிறுவனங்கள் வழக் கமாக காலாண்டுக்கு ஒரு முறை நடத்தும் பாதுகாப்பு மறுபரிசீல னையை அடுத்த மாதத்திற்குப் பதிலாக இப்போதே உடனே நடத் தும்படி அந்தச் சங்கம் நிறுவனங் களுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளது. 
இந்த ஆண்டு தொடக்கத் திலிருந்து இதுவரை கட்டுமான வேலையிடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் நான்கு ஊழியர்கள் மரணம் அடைந்துவிட்டார்கள். கடைசியாக செங்காங் கட்டுமான இடத்தில் 36 வயது வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மாண்டார். 
இது பற்றி போலிசும் மனித வள அமைச்சும் புலன்விசாரணை நடத்தி வருகின்றன. 
கட்டுமான நிறுவனங்கள் கொஞ்ச நேரத்திற்கு வேலைகளை நிறுத்திவிட்டு, குறிப்பிட்ட ஒவ் வொரு நடவடிக்கையையும் எவ் வாறு மேற்கொள்கின்றன என்பதை எல்லாம் மறுபரிசீலனை செய்யும் நடைமுறை மூன்று மாதத்துக்கு ஒரு தடவை நிறுவனங்களின் விருப்பம்போல் இடம்பெற்று வரு கிறது. இத்தகைய மறுபரிசீலனை சில மணி நேரத்திலேயே பொது வாக முடிவடைந்துவிடும்.