லியாங் கோர்ட்டில் மோதல்: இருவர் கைது

லியாங் கோர்ட்டில் சனிக்கிழமை காலை நேரத்தில் நடந்த மோதல் தொடர்பில் இரண்டு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்தக் கைகலப்பைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது. எண் 177 ரிவர் வேலி ரோடு முகவரியில் உள்ள கட்டடத்தில் சனிக்கிழமை அதிகாலை 4.54 மணிக்கு நடந்த அந்தச் சம்பவம் பற்றி தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. இதன் தொடர்பில் 28 வயதுடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 
அவர்களில் ஒருவர் சுயநினைவுடன் மருத்துவ  மனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். 27 வயது     ஆடவர் புலன்விசாரணையில் உதவி வருகிறார் என்று போலிஸ் தெரிவித்தது. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்