பருவநிலை மாற்றம்: குரல் கொடுக்கும் இளையர்கள் 

உலகில் பாதகமான பருவநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள இளையர்கள் மார்ச் 15ஆம் தேதி தங்களுடைய எண் ணத்தை ஓங்கி வெளிப்படுத்தப் போகிறார்கள். 
பள்ளிக்கூட வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டுகூட அவர் கள் இந்த அம்சத்தில் அதிக கவனம் செலுத்தப்போகிறார்கள். 
சிங்கப்பூரிலும் அதே நாளன்று பருவநிலைக்குக் குரல் கொடுப் பதற்கான திட்டங்கள் இருக்கின் றன என்று சிங்கப்பூர் இளையர் பருவநிலை செயலமைப்பைச் சேர்ந்த குமாரி பமிலா லோ, 23, என்ற பட்டதாரி கூறினார். விவரங்கள் பின்னர் வெளியிடப் படும் என்றார் அவர்.  

என்றாலும் இங்கு பள்ளி வகுப்புகள் புறக்கணிப்பு எதுவும் இருக்காது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது. 
“உலகில் இடம்பெறும் பருவ நிலை மாற்றம் காரணமாக எதிர்காலம் பாதிக்கப்படக்கூடிய சூழல் எழுந்துவிட்டது. பருவ நிலையைப் பாதுகாப்பதற்கு இன்னும் சிறந்த கொள்கைகளை அமல்படுத்தவேண்டும் என்பதால் நாங்கள் இத்தகைய குரலை எழுப்பவிருக்கிறோம்,” என்று குமாரி லோ தெரிவித்தார்.
தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மார்ச் 15ஆம் தேதி வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு பருவநிலை பாதிப்புகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல்கொடுக்க இருக்கிறார்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்