மூன்று அணுகுண்டு திட்டங்களால் வெற்றி கிட்டும் என்கிறார் அமைச்சர்

மதுரை: தங்கள் கூட்டணி வெற்றி பெற அணுகுண்டு போன்று சக்தி வாய்ந்த மூன்று திட்டங்கள் கைகொடுக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் மக்களுக்குப் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“பொங்கலுக்கு அனைத்து குடும்பங்களுக்கும் முதல்வர் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கினார். தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
“இந்த மூன்று திட்டங்களும் 3 அணுகுண்டுகள் போன்றவை. இவற்றின் மூலம் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும்,” என்றார் செல்லூர் ராஜூ.