சிங்கப்பூரிலிருந்து வெளியேற ‘மோபைக்’ விண்ணப்பம்

சிங்கப்பூர் சந்தையிலிருந்து ‘மோபைக்’ நிறுவனம் வெளியேறுகிறது. ‘ஓபைக்’, ‘ஓஃபோ’ ஆகிய இரு பெரும் பகிர்வு சைக்கிள் நிறுவனங்கள் சிங்கப்பூரிலிருந்து வெளியேறியதையடுத்து மூன்றாவதாக ‘மோபைக்’ வெளியேறுகிறது.

நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் வெளியேறுவதற்கான உத்தேச விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துவிட்டதாக நிறுவனத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

தென்கிழக்காசியாவில் ‘மோபைக்’கின் செயல்பாடுகளை நேர்த்திசெய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்தையிலிருந்து சுமுகமாக வெளியேற ஆணையத்துடன் இணைந்து செயல்பட்டு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று நிறுவனம் கூறியது.

தற்போது சிங்கப்பூரின் ஆகப் பெரிய சைக்கிள் பகிர்வு நிறுவனமாக உள்ளது மோபைக்.

இந்நிறுவனம் வெளியேறிய பின்னர் ‘எஸ்ஜி பைக்ஸ்’, ‘எனிவீல்’ ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே இச்சேவையை வழங்கும். இவை இரண்டும் இணைந்து 4,000 சைக்கிள்களை சேவையில் வைத்துள்ளன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது