சுங்கை காடுட் லூப் கட்டடத்தில் ஒருவர் மரணம், ஒருவர் காயம், சந்தேக நபர் கைது

சுங்கை காடுட் லூப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தில் 30 வயது ஆடவர் ஒருவர் இறந்து காணப்பட்டார்.

இதையடுத்து கொலை குற்றத்திற்காக நேற்று 23 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர்மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.     

சம்பவம் பற்றி காவல்துறைக்கு நேற்று பிற்பகல் 12.57 மணிக்குத் தொலைப்பேசி அழைப்பு கிடைத்தது.

காயமுற்றுக் கிடந்த மற்றொரு 29 வயது ஆடவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர் என்றும் அவர் பாதிக்கப்பட்டவர்களின் ஊழியர் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.