காலாங் ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம் கண்டறியப்பட்டது

காலாங் எம்ஆர்டிக்கு அருகே உள்ள காலாங் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமையன்று (10 மார்ச்) ஒரு பெண்ணின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இயற்கைக்கு மாறான இந்த இறப்பைப் பற்றி காவல்துறையினருக்கு அன்று மதியம் 5.29 மணிக்குத் தகவல் கிடைத்தது.

குடிமைத் தற்காப்புப் படைக்கு மாலை 5.35 மணியளவில் தகவல் கிடைத்தது.

பெண்ணின் சடலம் மீட்கப்பட்டவுடன் அவர் சம்பவ இடத்தில் இறந்ததாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.