டெலிகிராம் தொடர்புச் சேவையில் புதிதாக 'கார்பூலிங்' சேவை

ஓட்டுநர்களும் பயணிகளும் தனிப்பட்ட முறையில் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யும் 'கார்பூலிங்' எனப்படும் சேவையை இப்போது பொதுமக்கள் 'டெலிகிராம்' என்ற சமூக ஊடகத்தில் பெறலாம்.

'எஸ்ஜி ஹிட்ஜ் குருப்' எனப்படும் தொடர்புக் குழுவில் தற்போது 1,300 உறுப்பினர்கள் உள்ளனர். சென்ற மாதம் 26ஆம் தேதியன்று இந்தக் குழு தொடங்கப்பட்டது.  

நடுநபர் இல்லாமல் சுமுகமாக ஓட்டுநர்களையும் பயணிகளையும் இணைப்பது இந்தக் குழுவின் நோக்கம்.