பாம்பு சித்திரவதை தொடர்பில் விசாரணை 

பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனத் தின் இரு ஊழியர்கள் ஒரு பாம்பைக் கொடுமைப்படுத்தியதன் தொடர்பில் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் (ஏவிஏ) விசாரணை மேற்கொண்டுள்ளது.
மலைப்பாம்பு ஒன்றை இருவர் முறையற்ற விதத்தில் இரு காணொளிகள் ஃபேஸ்புக் வழி பதிவேற்றம் செய்ததை அடுத்து பல வனவிலங்குப் பாதுகாப்புக் குழுக்கள் தங்கள் கண்டனத் தைத் தெரிவித்துள்ளன. ‘பெஸ்ட்பஸ்ட்டர்ஸ்’ சீருடை அணிந்த ஒருவர் மலைப்பாம்பு இருந்த சாக்கைத் தரையில் எரிவதும் இரண்டாவது நபர் அதன் மீது மிதித்துப் பாம்பின் தலையை ஓர் இடுக்கியால் பிடிப் பதும் அக்காணொளிகளில் காணப்பட்டன. 
சம்பவம் நடந்தபோது பாம்பு எவ்வித உணர்வும் இன்றி இருந்ததாகவும் கூறப்பட்டது. இச்சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கலாம் என்றும் புதிதாகச் சேரும் ஊழியர்களுக்கு மூத்த ஊழியர்கள் பயிற்சிக்காக இவ்வாறு செய்து காட்டியிருக் கலாம் என்றும் நிறுவனத்தின் அதிகாரி யூஜீன் சுரேந்திரா கூறினார். 
இருப்பினும் இச்சம்பவம் சென்ற வியாழக்கிழமை நடந்தது எனக் காணொளிகளைப் பதிவு செய்த சாட்சிகள் கூறி யுள்ளனர். அத்துடன் பாம்பைத் தரையில் வீசுவதும் அதைப் பிடிப் பதுமாக அங்கிருந்த பூச்சிக் கட் டுப்பாட்டு நிறுவனத்தின் ஊழியர் கள் மீண்டும் மீண்டும் செய்த தாகவும் சாட்சிகள் கூறினர். பாம்புகளை முறையாகக் கையாள் வது தொடர்பில் சிங்கப்பூரின் அனைத்து பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கும் வனவிலங்கு நிர்வாக அமைப்புகளுக்கும் ஆணையம் ஒரு விதிமுறைத் தொகுப்பை வழங்கியிருப்பதாக ஏவிஏ நேற்று முன்தினம் கூறியது.