உயர் ரக கணினிக்கு கூடுதலாக $200 மி. முதலீடு  

உயர் ரக கணினித் துறையை மேம்படுத்தும் நோக்கில் கூடுதலாக $200 மில்லியனை அரசாங்கம் முதலீடு செய்யவுள்ளது என்று  ‘சூப்பர்கம்ப்யூட்டிங் ஆசியா 2019’ மாநாட்டில் நேற்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் அறிவித்தார்.
உயர் ரக கணினி (சூப்பர் கம்ப்யூட்டர்) துறையில் கவனம் செலுத்துவது சிங்கப்பூர் அறி வார்ந்த தேசமாகும் இலக்கின் ஒரு பகுதியாகும். 
2020ஆம் ஆண்டின் ஆய்வு, புத்தாக்கம், செயல்முனைப்புத் திட் டத்தின் கீழ் புதிய தொழில்நுட்பங் களை உருவாக்க அரசாங்கம் $19 பில்லியன் ஒதுக்கியுள்ளது. 
இதிலிருந்து இக்கூடுதல் நிதி பெறப்படும் என்று தேசிய ஆய்வு நிறுவன கழகத்தின் தலைவராக வும் உள்ள திரு ஹெங் பகிர்ந்து கொண்டார். 
கணினியின் திறனையும் கட் டமைப்பு வேகத்தையும் மேம்படுத்த இக்கூடுதல் நிதி உதவும். அத்துடன் உயர்கல்வி நிறுவனங் களுக்கும் ஆராய்ச்சி நிறுவனங் களுக்கும் தரமான பயன்பாடு அமையும்.
உயர் ரக கணினி பற்றி விளக் கிய அவர், 200க்கும் மேற்பட்ட இரைப்பை புற்றுநோய்க் கட்டிகள் தொடர்பான  தகவல்களை ஆராய சாதாரண கணினிகள் 30 ஆண்டு கள் எடுக்கும். 
ஆனால் செயற்கை நுண் ணறிவில் இயங்கும் உயர் ரக கணினி சில மாதங்களில் அவ் வேலையை முடித்துவிடும். இது நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்று உதாரணம் காட்டினார்.
கணினிகளிலேயே உயர் தொழில்நுட்பத்தில் இயங்குபவை இவ்வுயரக கணினிகள்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்